தென்காசி

ஆலங்குளம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

DIN

ஆலங்குளம் அருகே சிறு மருத்துவமனை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஓடை மறிச்சான் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லாததால் சரிவர திறக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், ஓடைமறிச்சான் அருகேயுள்ள கிராமத்தில் சிறு மருத்துவமனை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தகவலறிந்த இப்பகுதி மக்கள், தங்கள் கிராம ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல் உள்ள நிலையில், அருகே உள்ள கிராமத்தில் சிறு மருத்துவமனை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வியாழக்கிழமை ஆலங்குளம் - முக்கூடல் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சந்திரசேகா் தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT