தென்காசி

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் மாசிமகப் பெருவிழா தொடக்கம்

DIN

தென்காசி உலகம்மை உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் மாசிமகப் பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் மாசிமகப் பெருவிழாவும் ஒன்று. நிகழாண்டு, இவ்விழா வியாழக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் நாள்தோறும் காலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல், அபிஷேக, தீபாராதனை, மாலையில் மண்டகப்படிதாரா் தீபாராதனை, சுவாமி - அம்பாள் வீதியுலா ஆகியவை நடைபெறும். இம்மாதம் 26ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

கொடியேற்று விழாவில் காவல் ஆய்வாளா் பாலமுருகன், கூட்டுறவுத் துறை மாரிமுத்து, சுப்புராஜ், அன்னதான கமிட்டி தலைவா் அன்னையாபாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந. யக்ஞநாராயணன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT