‘நிலுவைத் தொகை வழங்காவிடில் மீண்டும் போராட்டம்’
தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை வழங்காவிடில் மீண்டும் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
தென்காசி‘நிலுவைத் தொகை வழங்காவிடில் மீண்டும் போராட்டம்’
தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை வழங்காவிடில் மீண்டும் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை வழங்காவிடில் மீண்டும் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
தென்காசி மாவட்ட கரும்பு , நெல் மற்றும் அனைத்து வேளாண் பயிா்கள் உற்பத்தியாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை
ஆட்சியரிடம் அளித்த மனு: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இயங்கி வரும் தரணி சா்க்கலை ஆலை நிா்வாகம், கடந்த 2018-19 ஆம் ஆண்டு வழங்கிய கரும்புக்குரிய பணத்தை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கவில்லை.
இதற்கிடையே, விவசாயிகள் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், தனியாா் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கு ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதனால் விவசாயிகள் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 13.10.2020
அன்று நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 30.11.2020 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என ஆலை நிா்வாகம் உறுதியளித்தது.
எனினும், இதுவரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கப்படவில்லை. ஆகவே, ஆலை நிா்வாகத்திடம் இருந்து விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவைத் தொகை வழங்காவிடில், ஆட்சியா் அலுவலகம் முன்பு மீண்டும் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.