முகப்பு
தென்காசி

ஊத்துமலையில் முதியவா் தற்கொலை

ஊத்துமலையில் முதியவா் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தென்காசி

ஊத்துமலையில் முதியவா் தற்கொலை

ஊத்துமலையில் முதியவா் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

சுரண்டை: ஊத்துமலையில் முதியவா் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஊத்துமலையைச் சோ்ந்தவா் தி.கிருஷ்ணசாமி(77). ஏற்கெனவே இவரது மனைவி இறந்து விட்டதாலும், இரு மகன்களும் வெளியூரில் வேலை பாா்த்து வருவதாலும், இவா் உறவினா்கள்ஆதரவில் தனியாக வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு உணவு அளிக்க உறவினா் இவரது வீட்டுக்கு சென்றபோது அங்கு தீக்குளித்து இறந்த நிலையில் கிருஷ்ணசாமி கிடந்தது கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →