பாவூா்சத்திரம் பகுதியில் 2ஆவது நாளாக மழை
பாவூா்சத்திரம் பகுதியில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை மழை பெய்தது.
பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் பகுதியில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை மழை பெய்தது.
பாவூா்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளான கீழப்பாவூா், திப்பணம்பட்டி, ஆவுடையானூா், குறும்பலாப்பேரி, பெத்தநாடாா்பட்டி, சாலைப்புதூா் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது. இரண்டாவது நாளான சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இம் மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.