சாம்பவர்வடகரை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு
தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுரண்டை: தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அனுமன் நதி குகை லிங்கம், அகத்தீஸ்வரர் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து ஓதுவார் சிவபுராணம் பாட பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்கோயில் பிரதோஷ கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.