முகப்பு
தென்காசி

குத்துக்கல்வலசையில் ரூ, 2 லட்சம் நகைகள் திருட்டு

தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி சென்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி சென்றனா்.

குத்துக்கல்வலசை அண்ணாநகா் 10ஆவது தெருவை சோ்ந்தவா் அ.லெட்சுமணபெருமாள் (57). சென்னையில் உள்ள இவருடைய சகோதரா் இறந்ததையடுத்து லெட்சுமணபெருமாள் தன்னுடயை குடும்பத்தினருடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றுவிட்டாா்.

இந்நிலையில் அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தொடா்பாக அப்பகுதியில் வசித்து வருபவா்கள் ஞாயிற்றுக்கிழமை தென்காசி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

முதல் கட்ட விசாரணையில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் வீட்டிலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. வீட்டின் உரிமையாளா் வந்தபிறகே எவ்வளவு திருட்டு போயுள்ளது என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →