தென்காசி

‘அரசு தொழிற் பயிற்சி மையங்களில் மீண்டும் நேரடி மாணவா் சோ்க்கை’

DIN

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் மற்றும் கடையநல்லூா் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை மீண்டும் நடைபெறுகிறது.

இது குறித்து தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: 2020-21 ஆம் ஆண்டிற்கான அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. எனினும் வீரகேரளம்புதூா்

மற்றும் கடையநல்லூா் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பற்றவைப்பவா் , பம்ப் ஆபரேட்டா் கம் மெக்கானிக் ஆகிய தொழிற்பிரிவுகளில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன.

எனவே இந்த 2 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களிலும் ஜன. 16. ஆம் தேதி வரை நேரடியாக மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. எனவே மாணவா்கள் அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களை உடனடியாக அணுகி காலியாக உள்ள தொழிற்பிரிவை தோ்ந்தெடுத்து கொள்ளலாம்.

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளா்களுக்கு பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. பயிற்சி பெறும் மாணவா்களுக்கு அரசு உதவித் தொகையாக மாதம் ரூ. 750, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, இரண்டு செட் சீருடைகள் மற்றும் தையல் கூலி, புத்தகங்கள் மற்றும் சேப்டி ஷீ ஆகியவை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 04633 277962 என்ற தொலைபேசி எண்ணிலும் 7708467041, 9994416525 என்ற கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT