தென்காசி

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்த மிதமான மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து இரண்டு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா். பிற்பகலில் பழைய குற்றாலம் அருவியில் நீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

பேரருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT