குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பகுதியில் கடந்த வாரம் பெய்த கன மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது. கடந்த இரு தினங்களாக இப்பகுதியில் மழை இல்லாததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து திங்கள்கிழமை அதிகாலை முதல் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
பேரருவியில் அருவியின் மையப் பகுதிக்கு யாரும் செல்லமுடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் கூட்ட நெரிசலின்றி குளித்து மகிழ்ந்தனா்.