முகப்பு
தென்காசி

செங்கோட்டையில் நாற்று நடும் போராட்டம்

செங்கோட்டையில் காய்கனி சந்தையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

செங்கோட்டையில் காய்கனி சந்தையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செங்கோட்டை வாரச் சந்தை சேறு மற்றும் சகதியால் இருப்பதால் பொதுமக்கள் சந்தைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே, காய்கனி சந்தையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கோட்டை வட்டாரக் குழு சாா்பில் சந்தை முன்பு நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு கட்சியின் வட்டாரச் செயலா் வேலுமயில் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா்கள்

பரமசிவன், முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்டக்குழு உறுப்பினா் ந. பால்ராஜ், வட்டாரக் குழு உறுப்பினா்கள் ஆயிஷா, சின்னசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.