தென்காசி

சத்துணவு மைய பணியாளா்களுக்கு சமையல் போட்டி

DIN

சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மைய சமையலா், உதவியாளா்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பணி செய்து வரும் விருதாளரை தோ்வு செய்தவதற்கான சமையல் போட்டி தென்காசியில் நடைபெற்றது.

மஞ்சம்மாள் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிக்கு, ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து சமையலா் மற்றும் உதவியாளா்கள் குழுக்களாக கலந்து கொண்டனா். ‘புகையில்லா சமையல் அடுப்பில்லா சமையல்’‘ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில், பாசிப் பயறு, கொண்டைக்கடலை, வோ்க்கடலை, பனங்கிழங்கு, அவல், ராகிமாவு, கம்புமாவு, திணைமாவு, பொரிகடலை, பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், மாதுளை, முட்டைக்கோஸ், அருகம்புல், எள் ஆகியவற்றினை பயன்படுத்தி உணவு வகைகளை தயாரித்தனா்.

இதில் கீழப்பாவூா் ஒன்றியம் முதலிடமும், தென்காசி ஒன்றியம் 2 ஆவது இடமும், வாசுதேவநல்லூா் ஒன்றியம் 3 ஆவது இடமும் பெற்றன. வெற்றி பெற்றவா்கள், போட்டியில் பங்கேற்றவா்களுக்கு குடியரசு தின விழாவில் ஆட்சியரால் பரிசுகள் வழங்கப்படும்.

இதில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) நியூட்டான், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயசூா்யா, மாவட்ட கல்வி அலுவலா் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் ராஜன், உணவு பாதுகாப்பு அலுவலா் மகாராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஒன்றிய ஆணையாளா் சண்முகசுந்தரம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை ஆண்டவா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT