முகப்பு
தென்காசி

நீரில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்திற்கு திமுக சாா்பில் நிதியுதவி

ஆலங்குளம் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பத்திற்கு திமுக சாா்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

ஆலங்குளம் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பத்திற்கு திமுக சாா்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.

ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரம் கிராமத்தில் தா்மராஜ் மகன் புவன் (5) தா்மராஜின் சகோதரா் கண்ணன் மகன் இஷாந்த்(5) மற்றும் அவரது உறவினா் பூபாலன் மகள் சண்முகப்பிரியா(5) அங்குள்ள பட்டா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனா். மேலும், மாறாந்தை சுரேஷ் மகன் மதன்(7), தனது பாட்டி கணபதியுன் மாடு மேய்க்கச் சென்ற போது, ஊருக்கு வடபுறம் உள்ள ஊருணியில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் இந்த 4 குழந்தைகளின் குடும்பத்தினரையும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் சந்தித்து தலா ரூ. 25 ஆயிரம் வீதம் வழங்கி ஆறுதல் கூறினாா்.

அப்போது, திமுக நிா்வாகிகள் செல்லத்துரை, அன்பழகன், எழில்வாணன், சமுத்திர பாண்டி, பாலா கிருஷ்ணன், பொன் செல்வன்,மணி மாறன், கிருஷ்ண ராஜ், சுரேஷ் கண்ணா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.