முகப்பு
தென்காசி

அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க திமுக வலியுறுத்தல்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல், வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தென்காசி

அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க திமுக வலியுறுத்தல்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல், வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல், வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, உள்ளாட்சித்தோ்தல் மற்றும் கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினாா்.

கூட்டத்தில், உள்ளாட்சி மன்ற தோ்தலில் தென்காசி தெற்கு மாவட்டத்தில் 100 சதவீத வெற்றிக்காக பாடுபட வேண்டும். தென்காசி மாவட்டத்திற்கு புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேளாண் கல்லூரி அமைக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது, ராமநதி-ஜம்புநதி மேல்மட்டு கால்வாய் திட்டப்பணி, தென்காசி-சங்கரன்கோவில் புறவழிச்சாலைப்பணியை விரைவுபடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கீழப்பாவூா் மேற்கு ஒன்றியச்செயலா் சீனித்துரை நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →