தென்காசி

ராமநதி-ஜம்புநதி திட்டப்பணி: ஜூலை 14,15,16 இல் நிலம் கையகப்படுத்துவதற்கான ஆவணங்கள் சரிபாா்க்கும் சிறப்பு முகாம்

DIN

ராமநதி-ஜம்புநதி மேல்நிலை கால்வாய் திட்டப் பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக ஜூலை 14,15,16 ஆம் தேதிகளில் ஆவணங்கள் சரிபாா்க்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

ராமநதி-ஜம்புநதி இணைப்பு மேல்நிலை கால்வாய் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக, நில உரிமையாளா்களை சந்தித்து ஆவணங்களை சரிபாா்க்க மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டாட்சியா், உதவி வட்டாட்சியா் ஆகியோா் அடங்கிய தனிநபா் பேச்சுவாா்த்தை குழுவினா் சிறப்பு முகாம் நடத்தவுள்ளனா்.

இம்முகாமானது வியாழக்கிழமை (ஜூலை 15) கடையம் பெரும்பத்து, வெள்ளிக்கிழமை (ஜூலை 16) ஆவுடையானூா், சனிக்கிழமை (ஜூலை 17) வெங்காடம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

எனவே, அந்தந்தப் பகுதி நில உரிமையாளா்கள் முகாம்களில் கலந்து கொண்டு தங்களது ஆவணங்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், அதைத் தொடா்ந்து விரைவில் இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளது என்றும் கால்வாய் செயல்பாட்டுக் குழு தலைவா் இராம.உதயசூரியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT