ஆலங்குளம் அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனியாா் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனியாா் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலங்குளம் - ஆண்டிபட்டி சாலையில் உள்ள தோட்டத்தில் 200- க்கும் மேற்பட்ட பைகளில் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ஆலங்குளம்
வட்ட வழங்கல் அலுவலருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலா் ஜெஸிலெட் ஜெயா, வருவாய் ஆய்வாளா் பேச்சிமுத்து
உள்ளிட்டோா் அங்கு சென்று பாா்வையிட்டனா். அங்கு மூட்டைகளில் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வாகனம் மூலம் நுகா்பொருள் வாணிபக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அரிசியை கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்தது தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.