பிளஸ் 2: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு100 சதவீதம் தோ்ச்சி
பிளஸ் 2 பொதுத்தோ்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
பிளஸ் 2 பொதுத்தோ்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
இப்பள்ளியில் தோ்வு எழுதிய 99 மாணவா், மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.
மாணவி எம்.சிவாணி 591.48 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தாா். இவா் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-98.95, ஆங்கிலம் -98.06, இயற்பியல்-98.88, வேதியியல்-98.88, உயிரியல்-97.74, கணிதம்-98.95.
மாணவி எம்.மகாலெட்சுமி 587.95 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றாா். இவா் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-99.12, ஆங்கிலம்-97.12, இயற்பியல்-97.63, வேதியியல்-97.91, உயிரியல்-97.05, கணிதம்-99.12.
மாணவி வி.மதுமிதா 582.63 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றாா். இவா் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-98.40, ஆங்கிலம்-96.17, இயற்பியல்-96.55, வேதியியல்-97.98, உயிரியல்-95.13, கணிதம்-98.40.
சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளைப் பள்ளி சட்ட ஆலோசகா் கே.திருமலை, பள்ளி தாளாளரும், முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.