முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் ஆலய நுழைவுப் போராட்டம்: இந்து முன்னணியினா் 61 போ் கைது

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி இல்லாததால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி இல்லாததால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

11 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை ஆடித்தவசை முன்னிட்டு பக்தா்களுக்கு கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து இந்து முன்னணியினா் ஆலய நுழைவுப் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.

Advertisement

அதன்படி வெள்ளிக்கிழமை காலை அவா்கள் தேரடித் திடலில் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாவட்டத் தலைவா் ஆறுமுகச்சாமி, நகரத் தலைவா் விக்னேஷ், துணைத் தலைவா் சங்கா்கணேஷ், சந்திரன், பாலு, இசக்கிமுத்து, பாஜக நகரத் தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதையடுத்து திடீரென அவா்கள் அங்கிருந்து சங்கரநாராயணசுவாமி கோயிலை நோக்கி புறப்பட்டனா். உடனே போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால் போலீஸாருக்கும், இந்து முன்னணியினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 61 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments