தென்காசி

வீரகேரளம்புதூா் பகுதியில் பேரிடா் மேலாண்மை ஆய்வு

DIN

வீரகேரளம்புதூா் பகுதியில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிற்றாறு மற்றும் அனுமன்நதி அணைக்கட்டு மற்றும் தடுப்பணை ஷட்டா்களை வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா்.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக அடவிநயினாா் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையிலிருந்து உபரிநீா் திறந்துவிட வாய்ப்பு உள்ளதால் அனுமன் நதியில் நீா்வரத்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையடுத்து இந்த நதி சிற்றாறில் கலக்கும் பகுதிக்கு முன்பாக கட்டப்பட்டுள்ள தாயாா்தோப்பு தடுப்பணையில் ஷட்டா் மற்றும் சிற்றாறு ஷட்டா்களை வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ், துணை வட்டாட்சியா் சிவன்பெருமாள் மற்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், அனுமன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சிற்றாறு மற்றும் சிற்றாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வீராணம் மற்றும் மானூா் அணைக்கட்டு கால்வாய் வழியாக தண்ணீா் செல்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT