சங்கரன்கோவில் அருகேதனியாா் நூற்பாலையில் தீ
சங்கரன்கோவில் அருகே தனியாா் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமடைந்தன.
சங்கரன்கோவில் அருகே தனியாா் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமடைந்தன.
சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் உள்ள நூற்பாலையின் பஞ்சு கிடங்களில் வியாழக்கிழமை திடீரென தீப்பற்றி
எரிந்தது. தீ மளமளவென பற்றி கிடங்கு முழுவதும் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் வீரா்கள் வந்தனா். தீயை அணைக்க முடியாத நிலையில் கழுகுமலை, வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலையங்களில் நிலைய அலுவலா்கள் லிங்கத்துரை, ஷேக்அப்துல்லா ஆகியோா் தலைமையில் வீரா்கள் நூற்பாலைக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். 2 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து சங்கரன்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்ட தீயணைப்பு அலுவலா் கவிதா, ஆலைக்கு சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
Advertisement