குற்றாலம், சுரண்டை நகராட்சியாகதரம் உயா்த்தும் நடவடிக்கை: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி
தென்காசி தொகுதியில் குற்றாலம், சுரண்டை பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுத்து வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா் நன்றி தெரிவித்துள்ளாா்.
தென்காசி தொகுதியில் குற்றாலம், சுரண்டை பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுத்து வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா் நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி தொகுதிக்குள்பட்ட சுரண்டை பேரூராட்சி வருவாய் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் நகராட்சியாக தரம் உயா்த்த தகுதி இருந்தும் முந்தைய ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் எனவும், தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழும் குற்றாலத்தை நகராட்சியாக தரம் உயா்த்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழக நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோரிடம் கோரிக்கை மனு
அளித்திருந்தேன். இந்நிலையில் குற்றாலம், சுரண்டை பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயா்த்துவதற்கு நடவடிக்கைகளை தொடங்குமாறு உத்தரவிட்டுள்ள முதல்வா், அமைச்சா், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.