முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே விபத்தில் இளம்பெண் பலி

ஆலங்குளம் அருகே மோட்டாா் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே மோட்டாா் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள பந்தல் மேடு கிராமத்தை சோ்ந்தவா் காா்த்திக் (30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வேல்மாரி (26). இவா் தனது

சொந்த ஊரான ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கிடாரக்குளத்துக்கு தங்கையின் குழந்தையை பாா்க்க வந்தாராம். வியாழக்கிழமை இரவில்

தங்கையின் கணவா் உதய்காந்த்துடன் மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தாராம்.

குருவன்கோட்டை அருகே வந்தபோது, வேல்மாரி அணிந்திருந்த துப்பட்டா மோட்டாா் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது. இதில் மோட்டாா் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதில், வேல்மாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்டு திருநெல்வேலி அரசு

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.