தென்காசி

விதிமீறல்: சங்கரன்கோவிலில் ஜவுளிக்கடைக்கு சீல்

DIN

 சங்கரன்கோவிலில் கரோனா விதிகளை மீறி செயல்பட்ட பிரபல ஜவுளிக் கடை உள்ளிட்ட 2 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

சங்கரன்கோவிலில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து நகராட்சி சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையாபாஸ்கா், சக்திவேல், கருப்பசாமி, மாதவராஜ்குமாா் மற்றும் வருவாய் ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது முக்கியச் சாலையில் விதிகளை மீறி பிரபல ஜவுளிக் கடை உள்பட 2 கடைகள் செயல்பட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து மேற்கண்ட் 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் கரோனா வழிகாட்டும் நெறிகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு தலா ரூ. 500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. முகக் கவசம் அணியாமல் வந்த மூவருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT