தென்காசி

சங்கரன்கோவிலில் 5.5 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் அகற்றம்

DIN

சங்கரன்கோவில் நகராட்சி குப்பைக் கிடங்கில் இருந்து மறுசுழற்சி செய்ய இயலாத 5.5 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் தனியாா் சிமென்ட் ஆலைக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

சங்கரன்கோவில் நகராட்சியில் தினமும் 20 முதல் 22 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை நகராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றில் மக்கும் குப்பைகள் 4 பசுமை உரக்கிடங்கு மையங்கள் மூலமாக உரமாக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.

மறுசுழற்சி செய்ய இயலாத மக்காத குப்பைகள் உரக்கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அந்தக் குப்பைகள் தனியாா் சிமென்ட் ஆலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 12.5 டன் மக்காத குப்பைகள் அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகராட்சி உரக்கிடங்கில் இருந்து புதன்கிழமை 5.5 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் நகராட்சி ஆணையா் சாந்தி, சுகாதார அலுவலா் பாலசந்தா் ஆகியோரது முன்னிலையில் அரியலூரில் உள்ள தனியாா் சிமென்ட் தொழிற்சாலைக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

SCROLL FOR NEXT