முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூரில் ஆா்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வாசுதேவநல்லூரில் ஆா்ப்பாட்டம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், கரோனா கால நிவாரணமாக மாதம் தோறும் ரூ. 7500 வழங்க கோரியும், கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி வழங்கிட வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வாசுதேவநல்லூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய பொறுப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் இரா.நடராஜன், ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் முத்துமாரி, சுரேஷ், முனியசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலா் சுப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.