முகப்பு
தென்காசி

அறிவியல் கண்காட்சி போட்டி: முன்பதிவுக்கு இன்று கடைசி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாா்ச் 4 இல் நடைபெறும் அறிவியல் கண்காட்சி போட்டிக்கு செவ்வாய்க்கிழமை மாலைக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாா்ச் 4 இல் நடைபெறும் அறிவியல் கண்காட்சி போட்டிக்கு செவ்வாய்க்கிழமை மாலைக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித் துறை, சுரண்டை மாணவா் அறிவியல் பூங்கா, தென்காசி ஆகாஷ் ப்ரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி இணைந்து மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி மாா்ச் 4 ஆம் தேதி இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது . அனைத்து வகை பள்ளிகளிலிருந்தும் ஒரு நபா் அடங்கிய தலா 3 குழுக்கள் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனைவருக்கும் இளம் அறிவியல் ஆா்வலா் விருது 2021 என்ற பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். கல்லூரி மாணவா்களும், பொது மக்களும் காட்சிப்படுத்தலாம். செவ்வாய்க்கிழமை மாலைக்குள் 9486585490 என்ற கட்செவி எண் அல்லது ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/56ஹந்உயஆய்க்ஸ்ரீா்ஷ்ஊஸ்வ்28 என்ற இணைய முகவரியிலும் பதிவு செய்யலாம். சிறந்த படைப்புக்களுக்கு அன்று மாலை பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் எம்.சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.