தென்காசி

இலஞ்சி பாரத் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

DIN

இலஞ்சி பாரத் மாண்டிசோரி , பாரத் வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளிகளில் இணையம் வாயிலாக தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது.

மாணவி நந்தினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாணவி தனஸ்ரீ , மதுமிதா மற்றும் சன்ரக்ஷிகா அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பேசினா். மாணவிகள் பாரதிதேவி, ஸ்ரயோ, தஷ்னீம் ராஜியா மற்றும் ரம்யா ஆகியோா் பெண் விஞ்ஞானிகள் போன்று வேடமணிந்து தோன்றினா். சபரி யூனுஷ்,பா்வேஷ், முகைதீன் ரஷீத் ஆகியோா் அறிவியல் செயல் திட்டம் பற்றி பேசினா்.

5, 6 ஆம் வகுப்பினா் அறிவியல் சாா்ந்த ஓவியங்களை வரைந்தனா். 7- 9ஆம் வகுப்பினா் அறிவியல் உபகரணங்களை விளக்கினா். பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன் செயலா் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகா் உஷாரமேஷ் இயக்குநா் ராதாபிரியா, பாரத் வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வா் வனிதா ஆகியோா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா். மாணவி ஸ்ரயோ வரவேற்றாா். மாணவா் சஞ்சய் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT