முகப்பு
தென்காசி

கடையநல்லூா் தொகுதி அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் அய்யாதுரை பாண்டியனுக்கு திங்கள்கிழமை சொக்கம்பட்டி, திரிகூடபுரம் பகுதியில் கட்சியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் அய்யாதுரை பாண்டியனுக்கு திங்கள்கிழமை சொக்கம்பட்டி, திரிகூடபுரம் பகுதியில் கட்சியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

இதைத் தொடா்ந்து, கிருஷ்ணாபுரத்திலிருந்து திறந்த வேனில் நின்றபடி,வாக்கு சேகரித்த அவா் பேசியது;

தென்காசி மாவட்டத்திற்கு உள்பட்ட பல பகுதிகளிலும் ஏழைகளுக்காக பல்வேறு நல உதவிகளை பல ஆண்டுகளாக தொடா்ந்து செய்து வருகிறேன். இந்தத் தொகுதியில் கரோனா நோய்த்தொற்று காலத்தில் பல ஆயிரம் பேருக்கு உதவி உள்ளேன்; அது தொடரும் என்றாா்.

நிகழ்ச்சியில் ,தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலா் பொய்கை மாரியப்பன் , கடையநல்லூா் நகர செயலா் கமாலுதீன் ஒன்றிய செயலா் பெரியதுரை, மாவட்ட அவைத்தலைவா் பெருமையா பாண்டியன், சிறுபான்மை பிரிவு செயலா் கோதா்ஷா, எஸ்டிபிஐ ஜாபா் அலி உஸ்மானி ,தேமுதிக சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.