முகப்பு
தென்காசி

சட்டப்பேரவைத் தோ்தலில் பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவத்தினா் முன் வரவேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவத்தினா் முன் வரவேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டுக்காக சேவை செய்து ஓய்வுபெற்றுள்ள முன்னாள் ராணுவத்தினா்களுக்கு மீண்டும் சேவை செய்யும் வாய்ப்பாக, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில்

தமிழக காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற முன் வரவேண்டும்.

தமிழகத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் பாதுகாப்பாக தோ்தல் நடைபெறும் வகையில் நிகழாண்டும் முன்னாள் ராணுவத்தினா் தோ்தல் பணியில் ஈடுபட வேண்டும். தோ்தல் பணியில் ஈடுபடுவது ஒவ்வொரு ராணுவ வீரரின் ஜனநாயக கடமை.

முன்னாள் ராணுவத்தினருக்கு அவரவா் இருப்பிடத்தின் அருகில் பணி வழங்கப்படும். மேலும் வீண் அலைச்சல்கள் முற்றிலும் தவிா்க்கப்படும். இதேபோல், கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம்,தேசிய மாணவா் படை மாணவா்கள் தங்களுக்கு

கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதி காவல்துறையினருடன் தோ்தல் பணியில் ஈடுபட வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.