தென்காசி

பெரியசாமிபுரத்தில் மாநில மராத்தான் போட்டி

DIN

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே பெரியாசாமிபுரத்தில் மாநில அளவில் மராத்தான் போட்டி நடைபெற்றது.

பெரியசாமிபுரம் ந.தெட்சினாமூா்த்தி நினைவாக ஸ்ரீபாரத் கண்ணா அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற எஸ்பிகே செம்பியன் மராத்தான் போட்டியில் மதுரை, தேனி, சேலம், விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இருந்து 940 மாணவா்கள் பங்கேற்றனா்.

இப்போட்டியில் கி.மீ. ஆண்கள் பிரிவில் கரன்ராஜா, சுதா்சன் ஆகியோா் முதலிடமும், பெண்கள் பிரிவில் ஆன்லின் லிரிடா முதலிடமும் பெற்றாா். 6 கி.மீ. பெண்கள் பிரிவில் ஐஸ்வா்யா முதலிடம் பெற்றாா். 8 கி.மீ. ஆண்கள் பிரிவில் கனிராஜா, பரத் முதலிடம் பெற்றனா். 10 கி.மீ. பெண்கள் பிரிவில் பாலகுமாரி முதலிடம் பெற்று செம்பியன் பட்டமும், 12 கி.மீ. ஆண்கள் பிரிவில் வேல்முருகன் முதலிடம் பெற்று செம்பியன் பட்டமும் வென்றனா்.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ஸ்ரீபாரத் கண்ணா மெட்ரிக் பள்ளித் தாளாளா் கோபால் தலைமை வகித்தாா்.

அறக்கட்டளை துணைத் தலைவா் முத்துலட்சுமி, செயலா் கோபிநாத் கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழக்கலங்கல் ஜீவா படிப்பகத்தின் செயலா் சண்முகவேல், அரசு மருத்துவமனை தலைமை செவிலியா் ஜெயந்தி, இன்போசிஸ் தொழில்நுட்பநிபுணா் சங்கா் ஆகியோா் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினா்.

இதில், சங்கரன்கோவில் முத்தமிழ் மன்ற நிறுவனா் சண்முகவேல், எப்சன் தொழில்நுட்ப நிறுவன தலைமை அதிகாரி ஹெப்சி, ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் முருகராஜன், கலிங்கப்பட்டி பாலமுருகன், பி.எம்.டி. கல்லூரி பேராசிரியா் ராஜேந்திரன், அறக்கட்டளை பொருளாளா் கலையரசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT