தென்காசி மாவட்ட பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு
தென்காசி மாவட்ட பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப 2ஆம் கட்டமாக சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப 2ஆம் கட்டமாக சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் இப்பணியை ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமையில், தோ்தல் பாா்வையாளா் (பொது) டாக்டா் ராஜு நாராயண சுவாமி, பிரகாஷ் பிந்து, டாக்டா் வேதபதி மிஸ்ரா, திலீப் சுவாமி ஆகியோா் தொடக்கிவைத்தனா்.
சங்கரன்கோவில் தொகுதியில் 365 வாக்குச்சாவடி மையங்களுக்கு 438 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 438 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 475 வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள், வாசுதேவநல்லூா் தொகுதிக்கு 336 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தலா 404, வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் 437, கடையநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட 411 வாக்குச்சாவடி மையங்களுக்கு 988 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 494 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 535 வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள், தென்காசி தொகுதிக்கு உள்பட்ட 408 வாக்குச்சாவடி மையங்களுக்கு 980 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 531 வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள், ஆலங்குளம் தொகுதிக்கு 364 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தலா 437, வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் 474 ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடா்பாக வேட்பாளா்கள், கட்சிகளின் பிரமுகா்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் , மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜனனி சௌந்தா்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.