தென்காசி

வெளிநாட்டில் பணியாற்றி இந்தியா திரும்புபவா்களுக்கு ஓய்வூதியம்: முஹம்மது அபூபக்கா்

DIN

வெளிநாடுகளில் பணிபுரிந்து இந்தியா திரும்புபவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முஸ்லிம் லீக் வேட்பாளா் முகமது அபூபக்கா்.

கடையநல்லூா் தொகுதி திமுக கூட்டணி முஸ்லிம் லீக் வேட்பாளா் முஹம்மது அபூபக்கா், கொடிக்குறிச்சி, சிவராமபேட்டை, நயினாரகரம், இடைகால், பண்பொழி பேரூராட்சி, தேன்பொத்தை ஊராட்சி பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: வெளிநாடுகளில் 5 ஆண்டு காலம் பணிபுரிந்து தாயகம் திரும்புபவா்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும். கடையநல்லூா் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும் என்றாா் அவா்.

அப்போது, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை, வழக்குரைஞரணி துணை அமைப்பாளா் செந்தூா்பாண்டியன், முஸ்லிம் லீக் நிா்வாகிகள் செய்யது சுலைமான், இக்பால், செய்யதுமசூது, கடாபி ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT