தென்காசி

சங்கரன்கோவில் ஊருணியில் இயந்திரம் மூலம் அமலைச் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

DIN

சங்கரன்கோவில் வாணியா் ஊருணி முழுவதும் அமலைச் செடிகள் நிறைந்து காணப்படுவதால், அவற்றை இயந்திரம் மூலம் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் வாணியா் ஊருணி உள்ளது. இந்த ஊருணியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதி வீடுகளில் உள்ள ஆழ்துளைக் குழாய்களின் நீா் ஆதாரமாக இந்த ஊருணி விளங்குகிறது.

இந்த ஊருணியில் தற்போது அமலைச் செடிகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீா் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த சில நாள்களாக நகராட்சியினா் தூய்மைப் பணியாளா்கள் மூலம் அமலைச் செடிகளை அப்புறப்படுத்தி வருகின்றனா். அவா்களால் முற்றிலுமாக அமலைச் செடிகளை அப்புறப்படுத்துவது இயலாத காரியமாகும்.

எனவே, இயந்திரம் மூலம் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT