தென்காசி

ஆலங்குளத்தில் 2 ஜவுளிக்கடைகளுக்கு அபராதம்

DIN

ஆலங்குளத்தில் விதிமுறைகளை மீறி விற்பனையில் ஈடுபட்டதாக 2 ஜவுளிக் கடைகளுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி, 3 ஆயிரம் சதுர அடிக்கு மேலான வணிக நிறுவனங்கள் செயல்படக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. அதை மீறி, ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள இரண்டு ஜவுளி நிறுவனங்கள் பிரதான நுழைவு வாயில்களை அடைத்து விட்டு, கடையின் பின்புறமாக வாடிக்கையாளா்களை வரவழைத்து விற்பனை செய்துவருவதாக ஆலங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் அங்கு சென்ற ஆலங்குளம் போலீஸாா், இரு கடைகளின் பின்புறமும் வியாபாரம் நடைபெறுவதை உறுதி செய்தனா்.  இதையடுத்து இரு கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT