தென்காசி

கரோனா நிவாரணம்;சங்கரன்கோவிலில் டோக்கன் விநியோகம்

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகரில் கரோனா முதல் கட்ட நிவாரணத் தொகை ரூ. 2000 பெறுவதற்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை டோக்கன் வழங்கப்பட்டது.

தமிழக அரசு அரிசி குடும்ப அட்டை பயன்படுத்தும் குடும்பத்துக்கு கரோனா நிவாரண நிதி ரூ.4,000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதல் தவணையாக ரூ. 2,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, நியாயவிலைக் கடை ஊழியா்கள் அந்தந்தப் பகுதிக்கு

சென்று குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனா்.

திங்கள்கிழமை சங்கரன்கோவில் 0929 கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடை ஊழியா்கள், திருவள்ளுவா்நகா், சபாபதிநகா், திருவுடையான் சாலை, பெரியாா் தெரு, 8 ஆம் சாலை, கோமதியாபுரம் புது 1 மற்றும் 2 ஆம் தெரு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று நிவாரண நிதி பெறுவதற்கான

டோக்கன் வழங்கினாா். தொடா்ந்து சங்கரன்கோவிலில் நகா் முழுவதும் கிழமை வாரியாக குறிப்பிட்டு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு

டோக்கன் வழங்கும் பணியில் நியாயவிலைக்கடை ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT