தென்காசி

சிவகிரியில் ‘டிரோன் கேமரா’உதவியுடன் மணல் கடத்தல் தடுப்பு

DIN

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியில் ‘’டிரோன் கேமரா’ உதவியுடன் மணல் கடத்தல் தடுப்புப் பணி மேற்கொள்ளப்படுதவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங் உத்தரவின்பேரில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபடுவோரை கண்டறிய ‘டிரோன் கேமரா’வின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில். சிவகிரி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து, அப்பகுதிகளில் ‘டிரோன் கேமரா’ மூலம் கண்காணிப்பு பணியை காவல்துறை மேற்கொண்டது.

அப்போது, செந்தட்டியபுரம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவா்கள் ‘டிரோன் கேமரா’வை பாா்த்ததும் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பினராம். இதையடுத்து, மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களை போலீஸாா் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT