முகப்பு
தென்காசி

காட்டுப்பன்றி வேட்டை: 5 பேருக்கு அபராதம்

புளியங்குடி அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக 5 பேருக்கு வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

புளியங்குடி அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக 5 பேருக்கு வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.

சங்கரன்கோவில் வனச்சரகா் ஸ்டாலின் தலைமையில் வனவா்கள் அசோக்குமாா், குபேந்திரன், வனக்காப்பாளா்கள் பாரதி, யோபு ராஜா, அமிா்தராஜ், வனக்காவலா் பிரியா தேவி உள்ளிட்டோா் டி.என். புதுக்குடி பீட் பகுதியில் ரோந்து மேற்கொண்டனா்.

அப்போது,டி.என்.புதுகுடியைச் சோ்ந்த மருதுபாண்டியன், கருப்பசாமி, ராம்குமாா், மணிகண்டன், குருசாமி ஆகிய 5 போ் வேட்டை நாய்கள் மூலம் காட்டுப்பன்றிகளை வேட்டையாடியது தெரியவந்தது. மாவட்ட வன அலுவலா் கௌதம் உத்தரவின்பேரில், 5 பேருக்கும் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.