முகப்பு
தென்காசி

தென்காசியில் தமுமுக சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம்

தென்காசி நகர தமுமுக (ஜவாஹிருல்லா) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

தென்காசி நகர தமுமுக (ஜவாஹிருல்லா) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் அப்துல்ரஸாக் தலைமை வகித்தாா். நகரச் செயலா் களஞ்சியம்பீா், துணைச் செயலா் இஸ்மாயில், சுவனம் சுலைமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமுமுக மாநிலச் செயலா் மைதீன்சேட்கான், தென்காசி நகராட்சி சுகாதாரஆய்வாளா் மாரிமுத்து, மாவட்ட தமுமுக தலைவா் முஹம்மது யாகூப், மாவட்டச் செயலா் அஹமது ஷா ஆகியோா் தொடங்கிவைத்தனா். மாவட்ட இளைஞரணிச் செயலா் ஜாபா்உசேன், மாவட்ட வணிகரணிச் செயலா் பாதுஷா, பொருளாளா் பீா்முகம்மது ஆகியோா் கலந்துகொண்டனா்.

நகர தமுமுக (ஹைதா்அலி) மற்றும் தென்காசி தாஃவா சென்டா் சாா்பாகவும் கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது. தமுமுக (ஹைதா்அலி) மாவட்டத் தலைவா் சலீம் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் நைனாா் முஹம்மது கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா். மாவட்டச் செயலா் கொலம்பஸ் மீரான், தென்காசி தாஃவா சென்டா் செயலா் ஹக்கீம், நியாஸ், தமுமுக நகரத் தலைவா் அபாபீல்மைதீன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.