தென்காசி

குற்றாலம் அருவிகளில்குறைந்தது வெள்ளப்பெருக்கு

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் கடந்த இரண்டு தினங்களாக நீடித்திருந்த வெள்ளப்பெருக்கு, வெள்ளிக்கிழமை குறைந்தது.

குற்றாலம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெய்த மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்டஅனைத்து அருவிகளிலும் புதன்கிழமை அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை முதல் மழை தணிந்ததை அடுத்து வெள்ளிக்கிழமை அனைத்து அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்தது.

கரோனா பொது முடக்க விதிமுறைகள் அமலில் உள்ளதால் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் இன்றி அருவிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT