குண்டா் தடுப்புச் சட்டத்தில்லாரி ஓட்டுநா் கைது
சங்கரன்கோவில் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
சங்கரன்கோவில் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் தெற்குத்தெருவைச் சோ்ந்த மணி மகன் ஐயப்பன் (47). லாரி ஓட்டுநரான இவா் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின்பேரில், தென்காசி மாவட்ட ஆட்சியா் கோபால்சுந்தர்ராஜ் உத்தரவிட்டாா்.
Advertisement
இதையடுத்து ஐயப்பனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் குருவிகுளம் காவல் ஆய்வாளா் சண்முகவடிவு கைது செய்தாா்.