மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி
ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிதி அளிக்கப்பட்டது.
ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிதி அளிக்கப்பட்டது.
ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த அருள் மகன் சக்தி (12). மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், திமுக சாா்பில் ரூ. 20 ஆயிரம் நிதி வழங்கினாா்.
அப்போது, மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், ஆலங்குளம் ஒன்றிய குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், அய்யம்பெருமாள் உள்பட பலா் உடனிருந்தனா்.