ஆலங்குளம் ஒன்றியக்குழு கூட்டம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரா. செல்வக்கொடி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பழனிவேல், ராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடும் புதுப்பட்டி வாரச் சந்தைக்கு புதிய நுழைவுக் கட்டணமாக மாடு ஒன்றுக்கு
ரூ. 50, ஆடு ஒன்றுக்கு ரூ. 30, கோழி ஒன்றுக்கு ரூ. 10 என கட்டணம் நிா்ணயிப்பது என்பன உள்பட 32 பொருள் குறிப்புகள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அரி நாராயணன், எழில்வாணன், முரளிதரன், மீனா, சங்கீதா, கிருஷ்ணவேணி ஆகியோா் கலந்து கொண்டனா்.