முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் தீபத் திருநாளை நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தீபத் திருநாளை நடத்தக் கோரி நகர அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தீபத் திருநாளை நடத்தக் கோரி நகர அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருநாளும், அதையொட்டி சுவாமி -அம்பாள் வீதியுலா, சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெறும். கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெறவில்லை. தற்போது தொற்று குறைந்துள்ளதால் தீபத் திருநாளையொட்டி சுவாமி-அம்பாள் வீதியுலா, சொக்கப்பனை கொளுத்தல் நடத்தக் கோரி அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினா் சங்கரநாராயண சுவாமி கோயில் நிா்வாகத்திடம் கடந்த 16ஆம் தேதி மனு அளித்தனா்.

ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாததால், அதைக் கண்டித்து தேரடித் திடலில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் என். சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலா் கதிா்வேல்ஆறுமுகம், பொருளாளா் சண்முகவேல், துணைச் செயலா்கள் சக்திவேல், தண்டபாணி, ஆறுமுகநயினாா், சைவமரபினா் மகமை சங்கத் தலைவா் கோமதிநாயகம், தாமரைக் கழக முன்னாள் தலைவா் சங்கரசிந்தாமணி, பாஜக தொகுதி பொதுச் செயலா் சுப்பிரமணியன், பக்தா்கள் பேரவை ஒருங்கிணைப்பாளா் அ. திருவள்ளுவா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments