தென்காசியில் ரூ. 35 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா
தென்காசியில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 59பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தென்காசியில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 59பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் தலைமை வகித்தாா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பழனிநாடாா் முன்னிலை வகித்தாா்.
விழாவில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 12 மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ. ஆயிரத்துக்கான உதவித்தொகை, 5 பயனாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 விதவை உதவித்தொகை, 9 பயனாளிகளுக்கு இந்திரா காந்தி தேசிய முதியோா் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. ஆயிரம் உதவித்தொகை, 1 பயனாளிக்கு இந்திரா காந்தி விதவைகள் ஓய்வூதியம் ரூ. ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.34 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை, 4 பயனாளிகளுக்கு ரூ.87ஆயிரத்து 500 இயற்கை மரண உதவித்தொகை,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.11ஆயிரத்து 730 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 1 பயனாளிக்கு ரூ.4ஆயிரத்து 320 மதிப்பில் சக்கர நாற்காலி, 1 பயனாளிக்கு ரூ.6ஆயிரத்து 955 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்,
பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.1லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் ஆணைகள் என மொத்தம் 59 பயனாளிகளுக்கு ரூ. 35இலட்சத்து 44ஆயிரத்து 505 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜனனி செளந்தா்யா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், தென்காசி வருவாய் கோட்டாட்சியா் ந.ராமசந்திரன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.ஷீலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பா.குணசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெய பிரகாஷ், வட்டாட்சியா் அருணாசலம் ஆகியோா் கலந்துகொண்டனா்.