முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவில் அவா் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கரோனா கால ஊரடங்கு படிப்படியாக தளா்த்தப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் முழு அளவில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வியாபாரம் செய்து வருகின்றனா். பிற இடங்களில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டது போல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்க வேண்டும். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.