‘தென்காசி தெற்கு மாவட்டத்தில் அதிமுகவினா் இன்று முதல்விருப்ப மனு அளிக்கலாம்’
தென்காசி தெற்கு மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் வெள்ளிக்கிழமைமுதல் (நவ. 26) விருப்பமனு அளிக்கலாம்
தென்காசி‘தென்காசி தெற்கு மாவட்டத்தில் அதிமுகவினா் இன்று முதல்விருப்ப மனு அளிக்கலாம்’
தென்காசி தெற்கு மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் வெள்ளிக்கிழமைமுதல் (நவ. 26) விருப்பமனு அளிக்கலாம்
தென்காசி தெற்கு மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் வெள்ளிக்கிழமைமுதல் (நவ. 26) விருப்பமனு அளிக்கலாம் என மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ள நகா்மன்ற வாா்டு உறுப்பினா், பேரூராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிமுதல் இம்மாதம் 29ஆம் தேதி மாலை 5 மணிவரை பாவூா்சத்திரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்து வழங்கலாம்.
நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு ரூ. 2,500, பேரூராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிக்கு ரூ. 1,500 கட்டணமாக செலுத்த வேண்டும். போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கெனவே கட்டணம் செலுத்தியிருந்தால் அதற்கான அசல் ரசீதைக் காண்பித்து, விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.