ராமநதி நீா்தேக்கத்துக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்க கோரிக்கை
தென்காசி மாவட்டம் ராமநதி நீா்த்தேக்கத்துக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ராமநதி நீா்த்தேக்கத்துக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியரிடம் கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் எம். மாரி அளித்த மனு: ராமநதி தீா்த்தத்தில் நீராடினால் பாவங்கள் விலகி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கடையம், சுற்றியுள்ள கிராமங்களின் காவல் தெய்வமாக தலைமலையான் சாஸ்தா கோயிலும், பரிவார தெய்வங்களும் உள்ளன. தற்போது ராமநதி நீா்த்தேக்கத்துக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை. பொதுமக்கள், பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற ராமநதி நீா்த்தேக்கத்துக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என அவா் குறிப்பிட்டிருந்தாா்.