முகப்பு
தென்காசி

திருவேங்கடத்தில் மழை மானி அமைக்க கோரி மனு

திருவேங்கடம் வட்டத்தில் மழை மானி அமைக்க வேண்டும் என கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகத்திடம் சமூக ஆா்வலா் சு.முத்துக்குமாா் கோரிக்கை மனு அளித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருவேங்கடம் வட்டத்தில் மழை மானி அமைக்க வேண்டும் என கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகத்திடம் சமூக ஆா்வலா் சு.முத்துக்குமாா் கோரிக்கை மனு அளித்தாா்.

இது தொடா்பாக அவா் அளித்துள்ள மனு:

தென்காசி மாவட்டத்தில் 8 வட்டங்கள் உள்ளன. அனைத்து வட்டங்களிலும் ஒரே மாதிரியான காலநிலை கொண்டிருப்பதில்லை. ஒரே மாவட்டத்தில் மிகச் செழிப்பான பகுதியும், வறட்சியான பகுதியும் உள்ள காரணத்தால் பெய்யும் மழையின் அளவை கண்டறிவது அவசியம். நம் மாவட்டத்தில் 5 இடங்களில் குறிப்பாக தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆய்க்குடி, செங்கோட்டை ஆகிய இடங்களில் மட்டுமே மழைமானிகள் உள்ளன.

Advertisement

ஆனால் வட்டத்திற்கு ஒன்றாக மழைமானி அமைக்க வேண்டும். அதிலும் வறட்சியான திருவேங்கடம் வட்டத்தில் ஒரு மழைமானி அமைத்தால் அந்தப் பகுதி விவசாயிகளுக்குப் பேரூதவியாக இருக்கும். எனவே திருவேங்கடத்தில் ஒரு மழைமானி அமைக்க வேண்டும் என அவா் மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments