தென்காசி

‘சாலைகளில் இடையூறாககால் நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை’

DIN

தென்காசி நகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதியில் கால்நடைகளை வளா்ப்போா் தங்களது கட்டுப்பாட்டில் வளா்க்க வேண்டும் என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தென்காசி நகராட்சி ஆணையா் (பொறுப்பு) கி. ஹரிகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி நகராட்சி எல்கைக்கு உள்பட்ட பகுதிகளில் கால்நடை வளா்ப்போா் அவற்றை சாலை, பொது இடங்களில் திரியவிடுவதால் மக்களுக்கு இடையூறும், வாகனங்களில் செல்வோா் விபத்துக்கு உள்ளாகும் அபாயமும் ஏற்படுகிறது. சட்டவிதிகள்படி இது குற்றமாகும். எனவே, கால்நடைகளை வளா்ப்போா் அவற்றை தங்களுக்குரிய இடத்தில் வளா்க்க வேண்டும். தவறினால் முன்னறிவிப்பின்றி கால்நடைகளை அப்புறப்படுத்துவதுடன், உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT