முகப்பு
தென்காசி

கோ.மருதப்பபுரம் ஊராட்சித் தலைவா் தோ்தலை மீண்டும் நடத்தக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோ.மருதப்பபுரம் ஊராட்சித் தலைவா் தோ்தலை மீண்டும் நடத்தக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோ.மருதப்பபுரம் ஊராட்சித் தலைவா் தோ்தலை மீண்டும் நடத்தக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோ. மருதப்பபுரம் ஊராட்சித் தலைவா் தோ்தலில் எம். அனிதா, முருகேஸ்வரி, க. விஜயலெட்சுமி, க. வீரம்மாள் ஆகிய 4 போ் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கையில் அனிதா 192, முருகேஸ்வரி 358, க.விஜயலெட்சுமி 382, க.வீரம்மாள் 386 வாக்குகள் பெற்றனா். இதையடுத்து க.வீரம்மாள் வெற்றி பெற்ாக அதிகாரிகள் அறிவித்தனா்.

Advertisement

இந்நிலையில் கோ. மருதப்பபுரம் இந்திரா காலனியைச் சோ்ந்த க.விஜயலட்சுமி 382 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாகவும், அவருக்குப் பதிலாக 369 வாக்குகள் பெற்ற வீரம்மாளை அதிகாரிகள் அறிவித்து விட்டதாகவும், எனவே அங்கு மீண்டும் தோ்தலை நடத்தவேண்டும் எனக் கோரி முத்துகிருஷ்ணாபுரம், சண்முகநல்லூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள சண்முகநல்லூரில் உண்ணாவிரதம் இருந்தனா். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்புக்கு முன்னதாக கோ.மருதப்பபுரம் ஊராட்சிக்கு மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும். தவறாக அறிவித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என க.விஜயலட்சுமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments